malar

மலர்


• சூரிய வீதியின் தூசு
• காதலின் தூது

• கனிகளின் கருவறை
• கன்னியரின் காதலன்

• தென்றலின் தாப்பு
• துக்கத்தின் வளையம்
• கதிரவன் வருகைக்கு பராக்

• குதூகலத்தின் கொத்து
• வண்டுகளின் அந்தப்புரம்
• தேனீக்களின் மதுபானச்சாலை
• பட்டாம் பூச்சிகளின் பள்ளியறை

• எந்தச் செடிக்கும் தலைப்பிரசவம்

• பச்சை போர்வையின் ஓவியச்சிதறல்
• சடங்கிற்க்கும் சடலதிற்க்கும் அலங்காரம்

• மாலை பறவைகளின் வழிகாட்டி
• சமவெளிகளின் வண்ணச்சிதறல்

எழுதியவர் : (22-Apr-12, 8:24 pm)
சேர்த்தது : puthuvai gayathiri (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 194

மேலே