மணி பர்ஸ்
மாதத்தின் முதல் வாரம்
இதயத்தின் மீதோ
இடையின் ஓரத்திலோ
நிம்மதி இன்றி
உறங்கிடும் நிறைமாத கர்பிணி
இரண்டாவது வாரம்
நீண்ட பயணத்தினால்
வந்த இடை மெலிவு
மூன்றாவது வாரம்
சிதறிவிழும் சில்லறையின்
சிரிப்பொலி
நான்காவது வாரம்
உடலால் உள்ளத்தால்
ஒரு
விலைமாது,,,,
- மழைக்காதலன்