சபிக்கபட்டோம்

அச்சத்திலேயே இருண்டு
போன அந்த
ராத்திரியில் -மேசையில்
எரிந்து கொண்டிருந்த
அரிக்கன் லாம்பை
அணைத்து வைத்தேன்

தினம் தினம் ராத்திரி
கழிந்து போனது
எங்கள் சகோதரியின் கற்பு
அழிந்து போனது -கால்
சப்பாத்துக்காரரிடம் !

நாய்களின் குரைப்பு
ஆந்தையின் அலறல்
என்றபடி
எங்கள் இனத்தவளின் கற்பழிப்பு
கதறலும்
இரவு நிகழ்வில் ஒன்றானது,
இயற்கையானது!


விடியல்களில்
வெள்ளி நிறச் சூரியன்
பூமி வந்தும்
இரத்தம் படிந்து கிடந்தது
தமிழ் பெண்ணின் உள்ளாடை
அவள் வீட்டின் இருளில் .......

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (24-Apr-12, 12:30 pm)
பார்வை : 226

மேலே