எல்லோரும் மன்னர்களே!
அது
மிகப்பெரிய மடம்.
மரணப்படுக்கையில்
மடாதிபதி.
மரணத்துக்குமுன்
சீடர்களில் ஒருவரை
வாரிசாக நியமிக்க
நினத்தப்போது....
சீடர்களிடம் சலசலப்பு
நாடோ? காடோ? மடமோ?
ஜனநாயகம்தான் வேண்டும்
தேர்தல் நடக்கவேண்டும்
போராடினார்கள் சீடர்கள்
தேர்தல் நடத்தவும்
ஆணையிட்டார் மடாதிபதி
ஆனால்,
அத்தனைசீடர்களும்
வேட்பாளர்களாக
போட்டியிட்டதால்.....
வாகளிப்பதர்க்குதான்
வாக்காளர்கள் இல்லை
வெட்டுக்குத்து அமளி
மடமே இரத்தக்களமானது
கலங்கிப்போனார் மடாதிபதி
”எல்லோரும் மன்னர்களே!
எல்லோரும் மடாதிபதிகளே”
என்று கண்ணை மூடிவிட்டார்.
(இது இந்தியாவில் நடந்தது அல்ல
பழைய சீனாவின் ‘குவாங் குவாங்’
மடத்தின் கதை)