பதில் சொல்லி விட்டு போ!!

உன் விழியின்
கதிர்வீச்சி பார்வையால்
என்னை ஆழந் தொடுகிறாய்..!!
போகும் திசையில்
தொட்டு தொடர
வைக்கிறாய் நீ ..!!
என் வார்த்தைகள்
அனைத்தும் உன்னிடம்
மட்டும் மௌன மொழியில்
சரண் அடைய வைக்கிறாய்
என்றால் எப்படி பெண்ணே?
என் மனமும் உன்னை
மட்டும் நினைத்து, என்னை
மறந்து வன்முறை செய்கிறது,
என்ன செய்தாய், பெண்ணே!
பதில் சொல்லி விட்டு போ! எனக்கு..!!