வழிப்பாதையில் ஓர் சிறுமி புகட்டிய சமூகத்துக்கான பெரிய பாடம் (பகுதி - 2 ) -ல் , திரு சங்கரன் ஐயா கேட்ட கேள்விக்கான பதில்
நான் படைத்த "வழிப்பாதையில் ஓர் சிறுமி புகட்டிய சமூகத்துக்கான பெரிய பாடம் (பகுதி - 2) "- ல், திரு சங்கரன் ஐயா கேட்டிருந்த கேள்விக்கு, இப்படைப்பை பதிலாக சமர்ப்பிக்கிறேன்.
நான் கவிதையின் குறிப்பில் கூறியவாறு, சிறுமி வடிவில் குப்பையை சுத்தம் செய்துக்கொண்டிருந்தவள், எனக்கு அன்னையாகவே (காக்கும் தெய்வம்) தோன்றினாள். ஆதலால்தான், இக்கவிதையும் படைக்கப்பட்டது.
ஆம், குற்றங்கள் (மனிதன் பொது இடங்களில் அசுத்தம் செய்தல்) செய்யச் செய்ய, யாராவது ஒருவர் இதில் வருத்தத்துக்கு உள்ளாக்கப்படுவர், அவரின் மூலம் பலருக்கு நற்ப்பாடமும் கற்ப்பிக்கப்படும்.
என் நாடான இந்தியாவை நான் மிகவும் நேசிப்பவன். இருந்தும், தவறிருந்தால் எடுத்துக்காட்டி திருத்துவதும் என் கடமை.
நம் நாட்டில் பெரும்பாலானோர், தன் வீட்டில் குப்பை விழுந்தால், சுத்தப்படுத்தி விடுவர்; ஆனால், மற்றவர் வீட்டிலோ, பொது வீதியிலோ, ரோட்டிலோ, பொது இடங்களிலோ குப்பையை வீசும்போதும், (துப்பும்போதும்) ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளமாட்டார். திமிர். ஆனால், அவனுக்கு ஒன்று தெரிவதில்லை, அவன் திமிர் எவ்வாறு ஒருநாள் கொல்லப்படுமோ, அவ்வாறே அக்குப்பை கொடிய நோயைக்கிளப்பி அவனை கொல்வதோடு மட்டுமல்லாது அவனைச் சார்ந்தோரையும் கொல்லும், சமூகத்தில் உள்ளோரையும் கொல்லும்.
இதற்கிடையில், இறைவனால் அனுப்பப்பட்ட அதுபோன்ற சிறுவர், சிறுமியர் குப்பைகளை சுத்தம் செய்து சமூகத்திற்கு பாடம் புகட்டுகின்றனர் (அவர்கள் பாதிக்கப்பட்டாலும்).
(ஏன் சிறுவர்-சிறுமியர்? ஏன் ஒரு ஆண் (அ) பெண்ணாக அதிகம் இருக்ககூடாது? ம்ம்ம்ம்.......
இவ்வாறு பொது இடங்களில், ஒரு ஆண் (அ) பெண் மற்றவர் வீசிய குப்பையை சுத்தம் செய்தால், அதை அவன் விதி என்றும், இல்லையேல் அவன் வேலை என்றும் சொல்லி, தான் குப்பைபோடுவதை நியாயப்படுத்துவர். ஏனெனில், நமக்குத்தான் இதயமே இல்லையே. நமக்கு இதயம் இருப்பதை, இதுபோன்ற சிறுவர்-சிறுமியர், குழந்தைகள் பாதிக்கப்படும்போதுதான், நமது பலநாள் வேலைசெய்யாத இதயம் திடீரென துடிக்கும்).
பிறருக்கு எனது வேண்டுகோள் யாதெனில்,
எதற்காக தான் தவறு செய்து, அதில் ஒருவர் வருத்தப்பட்டு, பின் திருந்துவதைவிட; ஏன், நாம் நமது புத்தியை சரிசெய்து திருந்தக்கூடாது?
நம் சமூகம் திருந்தினால், அச் சிறுவர்-சிறுமியருக்கும் நாளை நல்வழி கிடைக்குமல்லவா...????!!!!
குப்பையை அதற்க்கான பெட்டிகளில் சேகரித்து, சரியான முறையில் அப்புறப்படுத்துங்கள். அதைவிட்டுவிட்டு, நோயைக் கிளப்பி, நாட்டை சுடுகாடாக்காதீர்.
- A. பிரேம் குமார்