இனியதோர் பயணம்...

ஆழ்ந்த
இரவினில் ஒர்
அழகிய பயணம்
அது 'தட தட வென'
தவழ்ந்தோடிடும்
- இரயில்பயணம்..!

சன்னல்
ஓரத்தில்
இருக்கையின்
மடியில்
இமை மூடாமல்
-நான்..!

கதிரவன்
கண்ணுறங்கும்
வேளையில்
கண்ணுறங்கா
- மின்விளக்குகள்..!

கடலலைகள்
கரையினை
முத்தமிடுவது போல்
முகத்தினை முத்தமிட்ட
பனிச்சாரலாய்
- தென்றல்..!

எங்கோ
ஒர் மூலையில்
யாரோ
ஒருவரின்
கைப்பேசியின்
வழியே,
இதயங்களை
களவாடிச்செல்லும்
- இனிய மெல்லிசை ராகம்..!

தெளிவான
நீரோடை போன்ற
- சிந்தனை..!

எங்கும்
பரவியிருக்கும்
- அமைதிநிலை..!

இனியவளின்
நினைவுகளில் நடைபோடும்
- நிமிடங்கள்...!!!

எழுதியவர் : Gopi (8-May-12, 11:18 pm)
பார்வை : 212

மேலே