ரோஜாவைத்தான்

ஒவ்வொரு நிமிடமும்
ரோஜாவைத்தான் நினைக்கிறேன்
ஆனால் முள் வந்து குத்துகிறது

எப்போதும்
அன்பைத்தான்
ஆராதிக்கிறேன்
ஆனால் அவமானம்தான்
முன்னால் வந்து முகம் காட்டுகிறது

நட்பை மட்டுமே தேடுகிறேன்
ஏமாற்றம்தான்
என்னை பார்த்து சிரிக்கிறது?
இதென்ன விதியா என்னுடன் விளையாடுகிறது?

எழுதியவர் : சாந்தி (8-May-12, 11:33 pm)
சேர்த்தது : shanthi-raji
பார்வை : 226

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே