படிகள்
வாழக்கை படிகள்
ஒன்று முதல் எழுபது !
முதல் படி ,
முதல் நாள் ,
இருட்டில் இருந்து வெளியில் விழுந்தேன் ,
என் வரவிற்காக ,
தவம் கிடந்தவர்கள் சிலபேர் ,
தவித்தவர்கள் பலபேர் ,
என் அழுகையையும் பார்க்காமல் ,
அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி !
இரண்டாம் படி ,
முதன்முதலில் என் கால் பாதங்கள்
மண்ணை முத்தமிட்டபடி ,
சொந்தக்காலில் நிற்க பழக்க பட்டேன் ,
விளையாட்டாய் இடறி விழுந்ததற்கும்
பயந்து நான் அழ ,
பதட்டமாய் என் தாய் ,
வாரி அனைத்துக்கொண்டாள் !
வாழ்க்கையின் மூன்றாம் படி வரை ,
என் சுமையை சேர்த்து ஏன் பெற்றோரே சுமக்க ,
தாயின் மடியும் தந்தையின் மார்பும்
எனக்கு விளையாட்டு மைதானமாய் ,
என்னை சுற்றி எப்போதும் அக்கறைக் கண்கள் !
நான்காம் படியில் கால்வைக்கிறேன் ,
வாழ்க்கை சுமையை சுமக்க
கற்றுக்கொள்வது போல்
என் எடைக்கு ஏற்றாற்போல்
புத்தக சுமை ,
என் குடும்பத்தை தாண்டி ,
புதுப் புது அறிமுகங்கள் ,
நண்பர்கள் ஆசிரியர்கள் என ,
தாயின் தந்தையின் ,
அன்பிலே வளர்ந்ததால் ,
கண்டிப்பை ஆசிரியர் அறிமுகப்புடுத்தினார் !
ஐந்தாம் படிமுதல் ,
இருபதாவது படி வரை படிப்படியாய் பயணித்து ,
கண்ணும் கருத்துமாய்
கல்விக்கு முதலிடம் கொடுத்து
எதிர்கால திட்டங்களின்
இன்றைய செயல்பாட்டை செவ்வனே ,
புத்தக சுமை தவிர
வேறெதுவும் தெரியாத கால கட்டம் !
இருபத்தோராவது படியில்
கால்வைத்தபோது
புதிது புதிதாய் சுமைகள் தெரிய ,
முதலில் வந்தது குடும்ப சுமை ,
காட்டாற்று வெள்ளமாய் திரிந்த எனக்கு ,
முதல் கால் கட்டாய் மனைவி ,
என்னை அக்கறையுடன் கவனித்த அனைவரையும் ஒதுக்கிவிட்ட புது வரவு ,
எனக்கு மட்டும் என சிந்தித்த காலம் மாறி ,
நமக்கு என சிந்தித்த முதல் நாள் ,
சமுதாயத்தின் பார்வையில் எனக்கு
குடும்பஸ்தன் பட்டம் கொடுத்த நாள் !
இருபத்திரம்டாம் படியில்
கால்வைத்தபோது ,
எனக்கு அப்பா பட்டம் கிடைத்த நாள் ,
என் மனைவியின் அன்பில்
பாதியை மகன் எடுத்துக்கொண்ட நாள் ,
என் அப்பாவின் பொழுது போக்க
ஓர் புதிய வரவு ,
இன்று முதல் என் எதிர்கால சுமைகளோடு
அவனதையும் சேர்த்துக்கொண்டேன் ,
நான் பட்ட அனுபவங்களை
அவனும் கற்க தொடங்கிவிட்டான் !
படிப்படியாய் தாண்டி
நாற்பதை தொட்டேன் ,
என் நிழலாய் என் மகன் ,
என் குடும்ப சுமைகளில் தோள்கொடுக்க
இன்னொரு தூண் ,
நான் சொன்னதை மட்டும் கேட்ட என் குடும்பம் ,
அவன் சொல்லையும் கேட்க தொடங்கிய நாள் ,
என் அறிவுரைகளை அவன் பரீசீலிக்க தொடங்கிய நாள் !
நார்பெத்தி ரெண்டாம் படியில் ,
இங்கு நான் மாமனார் பட்டம் பெற்றேன் ,
எங்கள் சுமையோடு
இன்னும் ஒரு சுகமான சுமை ,
மனைவியின் கைப்பக்குவம் மாறி ,
மருமகளின் கைபக்குவத்தில் உணவு ருசிக்க ,
புதிதாய் வந்த உறவில்
நாங்கள் ஏதோ இடைஞ்சலாய் தெரிய ,
மகன் போனான் தனிக்குடித்தனம் ,
கலகலப்பான வீட்டில்
எதோ காலியாய் ஆனா மாதிரி ,
முகத்தை பார்த்த நாங்கள் ,
முறைத்து பார்த்தோம் சுவற்றையே !
அறுபதை தொட்டேன் ,
உள்ளத்தில் தெம்பிருந்தும்,
உடல் ஒத்துக்கொள்ளாததால் ,
வந்த பென்சனில் வாழ்க்கையை
சுருக்கிகொண்டோம் ,
முதுமை சற்று அதிகமானதால்
எனக்கு முன்னே மோட்சம் பார்த்தல் என் மனைவி
சடங்கு சம்பிரதாயத்துக்காக வந்த
சொந்த பந்தம் மறுநாளே காணாமல் போய்விட ,
வீடே வெறிச்சோடியது !
எழுபது ஆனதும்
மீண்டும் குழந்தையாய் ,
நடக்க நாதி இல்லாமல் ,
சாப்பிட வழியும் இல்லாமல் ,
ஊட்டிவிட ஆள் தேவைப்படுகிறது ,
குழந்தையில் அன்னை இருந்தால்
நடுவிலே மனைவி இருந்தால் ,
கடைசியில் யாருமே இல்லை ,
கடமைக்காக மூச்சை சோதிக்க
அடிக்கடி வந்தால் மருமகள் ,
மூச்சு நின்றதும் அழுக வேண்டிய
அவளும் சிரித்தால் !
பிறக்கையில் அழுதுகொண்டே பிறந்தேன்
அப்பொழுதும் சிரித்தார் ,
இறக்கையில் அழுதுகொண்டே இறந்தேன் ,
அப்பொழுதும் சிரிக்கிறார் !