!!!வாழ்க்கை பொன்மொழிகள் (பிரியாராம் )!!!

அழுகையை ரசிப்பவர்கள்தான்
ஆனந்தமாய் சிரிக்க முடியும்
***************

துன்பத்தில் விழுந்து எழுபவன்
வாழ்க்கையின் எல்லை வரை
இன்பம் காண்பான் .
*******************

தோல்வியை கண்டு அஞ்சாதவனை
வெற்றி துரத்தி கொண்டே வரும் .

*********************

ஒருவனை
அகந்தை ஆட்கொண்டால் -அழிவு
அவன் தலைமுறையையும் ஆட்டுவிக்கும் .

********************

மனிதர்கள்
வாழ்வில் பிரிவு இருக்கலாம்
பாகுபாடு இருக்க கூடாது ..

******************

இளைஞர்களின்
காதலில் பொய் இருக்கலாம்
காமம் இருக்க கூடாது ..

********************
பொய்
வாழ்வில் பொய் கூட உரைக்கலாம்
உண்மை பேசுபவன் போல்
ஒருபோதும் நடிக்காதே ....

************************
போர்களத்தில் மட்டுமே வாளேந்துபவன்
பூவினும் மென்மையான வீரன் ..

**************************

எழுதியவர் : பிரியாராம் (17-May-12, 5:15 pm)
பார்வை : 1726

மேலே