அந்த நிமிடம் .......
பதினொன்று ஆண்டுகள்
பள்ளியில்
பரவசமாய் படித்து
பனிரண்டாம் ஆண்டின்
பள்ளி தேர்வை
பயத்துடன்
பக்குவமாய் படித்து .....
தேர்வு முடிவுகள் வெளியாகும்
அந்த நாள் ....
அந்த நிமிடம் ....
அந்த மணித்துளிகள் .....
அந்த ஷணம்.....
அணைத்து கடவுள்களையும்
அம்சமாய் காதலித்து
கண்கள் மூடி பிரார்த்தனைகள் ....
கரம் கூப்பி வேண்டுதல்கள் ....
கால்கள் வலிக்க பிரதஷினங்கள் ....
உச்சி முதல் பதாம் வரை
உணர்ச்சிகளின் போராட்டம் ....
உடற் கூற்றில் வேதனைகள் ....
எதிர் பார்ப்புகளும்
என்ன அலைகளும் மோதி
இடி மின்னலை ஏற்படுத்த
கணினியின் சுவிட்ச் ய்
கவனமாய் அழுத்தி
குறியிட்டு எண்ணை
குறிப்பை அடித்து பெற்ற
மதிப்பெண்களை
மயக்கமான கண்களால் பார்க்கும் அந்த ஷணம் ..
லப் டப் ...
லப் டப் ...
இதயத்தின் அழுத்தம்
இமய மலையை தொட
கணித எண்களின் கூட்டு தொகையை
கண்களால் பார்த்த பின்
கண்களில் கண்ணீர் ...
கண்ணீர் ஆனந்தத்திலா அழுகையிலா ...
இந்த ஒரு மணி துளிக்கா
இத்தனை உணர்வுகள் ????? .
எது நடந்ததோ அது
நன்றாகவே நடந்தது .....
உணர்வுகளுக்கு அடிமையகாதீர்கள் ....
நீங்கள் அதை அடிமை ஆக்குங்கள் ....