பிச்சைக்காரர்கள் !

சமூகத்தில் ஜாதியில்
சேர்க்கபடாதவர்கள்,
இந்தியர்களாய் பிறந்தும் ,
ஓட்டுரிமை ,ரேஷன் ,இலவசங்கள் இல்லாதவர்கள்
சாலையோர தங்குமிடமே எங்களுக்கு நடமாடும்
அரண்மனைகள் !

இலவச மனைப்பட்ட கேட்டு
இதுவரை நாங்கள் விண்ணப்பித்ததில்லை,
கொட்டும் மழையும் ,
கொளுத்தும் வெய்யிலும் ,
உறையும் பணியும் ,
எங்களை ஒன்றும் செய்வதில்லை !

நாயும் , எலியும் , பூனையும்
எண்களின் கூட்டு குடும்ப வாசிகள் ,
சில வேளைகளில் எங்கள் குழந்தைகளின்
விளையாட்டு பொம்மைகள் ,
கட்டாந்தரையே எண்களின் பஞ்சு மெத்தை !

கிழிந்த உடைகளும்
அழுக்கு நிறமும் எங்களின் அடையாளங்கள் ,
உடல் கருத்திருந்தாலும் ,
உள்ளம் எங்களுக்கு வெள்ளையே ,
திருடி சாபிட்டதாய் சரித்திரம் இல்லை ,
தேவையென்றால் ,
கை நீட்டி பிச்சையே கேட்கும் பிச்சைகாரர்கள் !

பணத்திற்காக அலையும்
பணக்கார பேய்கள் நாங்களில்லை ,
மோசடி செய்யும் மோசக்காரர்கள் நாங்கள் இல்லை ,
திரு பிழைக்கும் திருடர்கள் நாங்கள் இல்லை ,
அதட்டி பறிக்கும் அரசியல்
ஊழல்வாதிகள் நாங்கள் இல்லை ,
கொலைகார பாவிகளும் நாங்கள் இல்லை ,
அதிகாரமாய் பெரும் சம்பளம் இருந்தும் ,
லஞ்சம் பெரும் லட்சியம் கொண்டவர்களும் இல்லை ,
எங்களக்கு தேவையென்றால்
கை நீட்டி பிச்சையே கேட்கிறோம் பிசைகாரர்களாய் !

மனிதர்களை நாங்கள் ஒதுக்குவதில்லை ,
மனிதர்கள் தான் எங்களை ஒதுக்குகிறார்கள் ,
திருடி பிழைப்பவர்கள் ,
ஊழல்வாதிகள் ,
லஞ்சப்பேர்வழிகளை காட்டிலும் மேலானவர்கள் ,
பணத்தின் பார்வையில் நாங்கள் பிச்சைக்காரர்கள் ,
குணத்தில் நாங்கள் கோடீஸ்வரர்கள் !

சாக்கடை ஓரத்தில் வசித்தாலும் ,
ஜாதி சாக்கடையால் சண்டையிட்டதில்லை ,
வயிற்றுக்கு பிட்சைகேட்கிறோம் ,
இதுவரை யார் வயிற்றிலும் அடித்ததில்லை !

இறைவனின் படைப்பில் நாங்களும் மனிதர்கள்
மனிதனின் பார்வையில் நாங்கள் பிட்சைக்கரர்கள் !

சமுதாயத்தின் பார்வையில்
நாங்கள் வேஷம் போடாத கூத்தாடிகள் ,
சிலருக்கு அருவருப்பானவர்கள் ,
சிலருக்கு காமடியன்கள் !

எங்களின் சுகங்களும் சோகங்களும்
நடுத்தெருவில்தான் ,
மறைப்புகள் இல்லாத அந்தரங்கம் ,
புனிதமானது கூட புறம்போக்கு
பொது இடத்தில் !

எங்களின் வலி யாருக்கு தெரியும் ,
வயசுப்பில்லையின் தட்டில் ,
சீன்டலோடு விழும் சில்லறைகள் !

எங்களுக்கு சொத்து ஒன்றும் இல்லை ,
எங்களின் பிச்சை பாத்திரம் தவிர ,
வாழும் வரையிலும் நாங்கள் அனாதைகள் ,
வாழ்ந்த பின்பும் "அநாதை பிணங்கள் "!

எழுதியவர் : வினாயகமுருகன் (27-May-12, 11:29 am)
பார்வை : 277

மேலே