புலம்பல்...
நான் கேட்காமலே
நீ செய்த உதவியால்
வந்த வினைதானோ....???
இது விதியின் விளையாட்டுதானோ..?
மாற்றாளின் மணாளன்
என தெரியவந்தும் கூட
மங்கை நெஞ்சம் உன் மீது
தஞ்சம் கொண்டதின் மாயம் என்னவோ...?
விவாகம் புரிந்து விவாகரத்திற்காக
காத்திருக்கும் கண்ணாளன் முகம்
கண்களுக்குள் அழியாமல் இருக்கும்
அர்த்தம் என்னவோ...?
உன்னோடு வாழவே
ஆசைப்பட்ட என்னை விட்டு
விலகி சென்றதும் சரிதானா..?
உண்மைக்காதலை
உணர்ந்து கொள்ள
மறுப்பதும் முறைதானா...?
உன் மனதில்
நான் இல்லையென
தெரிந்தும் சிறுபிள்ளைபோல்
கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்
நீ வேண்டுமென்றே அடம்பிடிக்கிறதே
உன் பெயர் சொல்லியே துடிக்கிறதே
என் இதயம்.....
ஆசைபட்டதை எல்லாம்
அன்போடு வாங்கி தந்த பெற்றோர்
உன்னை மட்டும் ஜாதியின் பெயரால்
விலக்குவதும் ஏனோ...?
அனேக காதலுக்கு சாவுமணி அடித்த
ஜாதியும் மதமும் மட்டும்
இன்னும் சாகாமல்
இருப்பதும் ஏனோ...?
நீ என் வாழ்வில்
இல்லாமல் போனாலும்
நான் வாழும் வரை இறைவனிடம்
வேண்டிக்கொள்வேன்
உன் வாழ்க்கை வசந்தமாக அமைய....
PRIYA