வந்தேமாதரம் சொல்லிவிட்டுப் பிறகு பேசிடுங்கள்...



வந்தேமாதரம்....




வந்தேமாதரம்....
வந்தேமாதரம்....
வந்தேமாதரம்....
வந்தேமாதரம்....


இந்த வார்த்தைகளைச் சொல்லும் போதே
மனதில் வீரம் கொப்பளிக்கிறது..
சொல்லிப்பாருங்கள்..

இந்த வார்த்தையை வெள்ளைக்காரனிடம் சொல்லி எத்தனையோ பேர்
ரத்தம் சிந்தியிருக்கிறார்கள்...

எத்தனையோ பேர் சிறைச் சாலைக்குச் சென்றிருக்கின்றனர்...

எத்தனையோ பேர் வெள்ளைக்காரனின்
பூட்ஸ் காலால்
உதை வாங்கியிருக்கின்றார்கள்...

அப்பேற்பட்ட இந்த வார்த்தையை
இன்று யாராவது ஒருத்தராவது
பயன்படுத்துகிறோமா?

இல்லையே...

இனியும் வேண்டாம் இந்த நிலை....

காலை வணக்கத்தோடு
"வந்தேமாதரத்தை " சேர்த்துச் சொல்லுவோம்...

குழந்தைகளிடம் இருந்து துவங்கிடுங்கள்...

திருமண அழைப்பிதழ்களில் மேலே வந்தேமாதரம்
என்று சேர்த்துக்கொள்ளுங்கள்...

போனில் பேசும்போது முதலில்
வந்தேமாதரம் சொல்லிவிட்டுப் பிறகு பேசிடுங்கள்...

உங்கள் சம்மந்தப்பட்ட அனைத்து நோட்டு, புத்தகங்களில் வந்தேமாதரம் என
எழுதிவையுங்கள்..

முடிந்தால் வீட்டு சுவரில் கூட வந்தேமாதரம் என எழுதி வையுங்கள்...

இன்னும் எந்தெந்த வழிகளில் வந்தேமாதரத்தை கூற முடியுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் நாம் மனதாரக் கூறுவோம்..

முடிந்த அளவு அனைவரிடமும் நாட்டுப்பற்றை எடுத்துரைத்து சாதி, மத,இன,மொழி பாகுபாடு இன்றி ஓர் சராசரி இந்திய குடிமகனாக இருக்க நாம் பாடுபடுவோம்...

இன்றைய தேவையும் அதுதான்....


ஜெய்ஹிந்த்...

எழுதியவர் : பசுவைஉமா (1-Jun-12, 6:33 pm)
பார்வை : 271

மேலே