தண்டனை அழகு

மனிதன்
எப்பேர்பட்ட தண்டனையையும்
பொறுத்துக் கொள்வான்
துணிச்சலுடன் ...!

நீங்கள்
மேலும் மேலும் கடுமை யாளராகச்
செயல் படுகையில்...!

தண்டனைகளை
எதிர்கொள்பவன்,
அவற்றைக் கையாள
மேலும் மேலும்
வளர்த்துக் கொள்வான்
அதற்கான திறமைகளை ...!

ஆனால்..
சில காரணங்க லுக்காக
அப்பாற்பட்ட அதீத
கருணை அவனைத் தோற்கடித்துவிடும்.
நொறுக்கி உடைத்துவிடும்.
கரைத்து விடும்
உயர்ந்த சிகர மனிதனாகும் போது...!

எழுதியவர் : செயா ரெத்தினம் (3-Jun-12, 6:48 pm)
பார்வை : 337
மேலே