எப்படி இருக்க..... ?

எனக்கான உன் பரிசுகள்
எல்லாம் கொஞ்சம்
வித்தியாசமானது தானடா......
உன் மனது என்று சொல்லி
நீ சேர்த்துத் தந்த
பூமியைத் தொடாத
புத்தம் புது மழைத்துளிகள்.....
உன் கோபம் என்று சொல்லி
விடியலுக்கு முன் எடுத்து
நீ கோர்த்த சில்லென்ற பனித்துளிகள்....
உன் ஆசைகள் என்று சொல்லி
உன் கைகளுக்குள் இருந்து எந்நேரமும்
சிறகு விரித்துப் பறக்க
எத்தனிக்கும் பட்டாம்பூச்சி.....
உன் ரசனைக்கு என்று சொல்லி
நீ கைகளில் பிடித்துத் தந்த நீலவானம்.....
உன் அன்புக்கு என்று சொல்லி
நீ விகல்ப்பம் இல்லாமல்
கொடுத்த கண்ணிமை முத்தம்....
இப்படி.....
நொடிக்கு நூறு முறை
உன்னையே நினைவு
படுத்துவதாய் உன் பரிசுகள்.....
நீ என்னுடன் இருக்கும் வரை சரி....
நீ உன் அலுவல் முடித்துத்
திரும்பும் வரையோ...?
நீ எங்கே என்று கேட்டு
என்னை இம்சிக்கின்றன......
உன் பரிசுகள் எல்லாம்!
எப்படி இருக்க..... ?
நீ இல்லாத தனிமையில்
உன் பரிசுகளை மட்டும்
என்னுடன் வைத்துக்கொண்டு........