ம(ன)ணப்பொருத்தம்

மணப்பொருத்தம் பார்த்து
நடந்தது திருமணம்

அவனும் அவளும் இரு துருவம்
இணைந்திருந்ததோ சில சமயம்
சில உயிர்கள் அதில் உதயம்

உதயமான உயிர்களின்
ஈர்ப்பு விசையால்
பிரியாமல் நகர்கிறது
இல்வாழ்க்கை
மனம் பொருந்தாமலேயே !

எழுதியவர் : அலாவுதீன் (15-Jun-12, 4:38 pm)
பார்வை : 202

மேலே