நான்

எதார்த்தம் பிடிக்காத
யதார்த்த வாதி....நான்!!..
என் தலை விதி.....நான் இதுவாகிறேனா?
அதுவாகின்றேனா?....எதுவாகின்றேன் என்று
எனக்கே புரியவில்லை!!...
உண்மை பேசிவிடவும் பிடிக்கவில்லை!........
உண்மை பேசாதிருப்பதும் பிடிக்கவில்லை!...
அந்நியனோ!... என்றால் அவனாகவும் பிடிக்கவில்லை!....
அப்போ நான்?!!....
பாசம் லேசா!
வேஷம் லேசா!
மோசம் மட்டும் வேண்டாம்!!
அப்போ நான் யார்?...
அவனே நான்!!...

என் திருவாய் மலரும் சொற்கள்!!
சில நேரம் சிரிக்க வைக்கிறது!...,
சிந்திக்க வைக்கிறது!...,
சிலிர்க்கவும் வைக்கிறது!....,
சில நேரம் சில்மிசமாகவும் இருக்கிறது!...
வளமாய் வருகிறது!இனமாய் வாழ்கிறது!
சில நேரம் மட்டும் சிக்கலிலும் சிக்கிக்கொள்கிறது!....

எதார்த்த வாதி நான் -என் வாய் மலரும் வார்த்தைகள் எதார்த்தமானவை!!.....
வாழ்த்துப் பெறுவதும்! -மிகவும் வருந்துவதும் அதனால்தான்!!.......

"இல்லை"என்கிற வார்த்தை
எனக்கு மட்டுமே உரித்தானது!!......ஏனெனில்!
எது கேட்டாலும்!.... என்ன பார்த்தாலும்!...
எது நடந்தாலும்!... முடிவு "இல்லை"என்றே
இனிதே முடிகின்றது!!....

"காதல்"அன்போடு தொடங்கி!.......
அரும்பாகி விரிந்து!....காற்றிலே பறந்து!...
கனவுக்கடலில் மிதக்கிறது!!.....
என்னோடு அதுவும் கரை தேடி!...கரை தேடி!.....

நான் நானாகிறேன்!....
சில நேரம் நாற்றமடிக்கிறது!!....
"வேதனையிலேயே வாழ்க்கை
தொலைந்து விடுமோ" என்று
வெட்கப்பட்டு! வெட்கப்பட்டு!!......
துணிந்து எழுகிறேன்!தூக்கம் கலைகிறது!
முகம் கழுவவில்லை....பனி விழுகிறது!....
பணிந்து விடுகிறேன்!!...
நான் நானாக இல்லையோ!!??....

"பயம்"
பய பயப்படலாமா!!?...
கேள்விப்பட்டவரை புத்திசாலி அம்மாக்களின்
அபரிவிதமான நம்பிக்கை!!...
நான் பயத்திலேயே வாழ்கிறேன்!
வாழ்க்கை..... வழுக்கும்.....
என்கிற வலுத்த நம்பிக்கையோடு!!....

வாழ்க்கை வழுக்க... வழுக்க...
என் போராட்ட குணமும்!
நீரோட்டமுள்ள என் ரத்த நாளங்களின்
யுத்த கனமும் மீண்டு வரும் நாள்! - என் மீது நம்பி "கை" "வை" என்கிறது "நம்பிக்கை"
நம்பி வைக்கிறேன் "கை"
என் பெயர் "வைகை"

எழுதியவர் : வைகை அழகரசு முத்துலாபுரம (25-Jun-12, 4:13 pm)
பார்வை : 188

மேலே