சொர்க்கமும் உன்னில் வரும்!

ரணங்கள் இல்லாத
மனமும் இல்லை!
வந்து செல்லாதே
காற்றும் இல்லை!
அலைகள் இல்லாத
கடலும் இல்லை!
அன்பு இல்லாத
உயிர்கள் இல்லை!
தவங்கள் இல்லாத
வரமும் இல்லை!
தனிமை தராத
ஞானமும் இல்லை!
தத்துவம் சொல்லாத
மொழிகளும் இல்லை!
எல்லாம் தெரிந்த
மனிதனே!
ஏனிந்த சோகம்?
எதற்கு இந்த அழுகை?
அழுக்கை நீக்க
ஆற்றை தேடு..
அமைதியை நாட
அன்பை விதை!
சோகமும் சுகப்படும்
சொர்க்கமும் உன்னில் வரும்!