தினக்கூலி

சவகிடங்கு தேவல
இங்கே சாக்கடைகள்தான் போகல
வருந்தி அழ நேரமில்ல
வாழும் நேரமும் போதல - இதபத்தி
கவலைப்பட்டு உறக்கம் கெட்டால்
காலையில் எழமுடியாது
தாமதம்தான் சற்று ஆனால் - தண்டனையாய்
வேலை இருக்காது அன்று
நேற்று உழைத்தது நேற்றைய பசிக்கே பத்தல
இன்னக்கி நன் எங்கேபோய் என்ன பன்ன?
ரெகுலர் கடைகாரனா இருந்தாலும்
முரைச்ச பின்புதான் முழுசா கடன் தருவான் சம்பலதேதி இல்ல எனக்கு
தினம் தினம் சம்பளம்தான்
அனாலும் வாழுறேன் வறுமைக்கு பிரன்தவனாய்

குறிப்பு .
இங்கே வாழும் வடநாட்டு தோழன் ஒருவனை ஹோட்டலில் பார்த்தேன் அவனுக்காக

எழுதியவர் : தமிழ்நேசன் (சுபாஷ்) (4-Jul-12, 10:27 am)
சேர்த்தது : thmizhnesan
பார்வை : 193

மேலே