மூன்று குழந்தைகள் அனாதைகளாய்
சண்டையிட்டு
நீயா ? நானா? எனப்போட்டியிட்டு
பெற்றோர் இருவரும்
தற்கொலை செய்துகொள்ள
நான்கு வயதுக்குட்பட்ட
மூன்று குழந்தைகள்
அனாதைகளாய்
செய்தி படித்ததும்
நெஞ்சில் பாரமாய்
நெடு நேரம் யோசனையாய்
எவ்வளவு பொறுப்பின்மை
ஏன் இந்தப் புரிதலின்மை
அர்த்தமில்லாமல்
பின்விளைவுகளை
அறியாமல்
தங்களுக்குள் சண்டையிட்டு
சாகும் பெற்றோருக்கு
பிள்ளைகளாய்ப் பிறந்தவர்கள்
படும் வேதனைகளை
பாடமாய்க்கூட வைக்கலாம்
பள்ளிக்கூடங்களில்
விட்டுக் கொடுப்பதுதான்
வாழ்க்கை
வீண் வம்பு பிடிப்பதில்லை
வாழ்க்கை என்பதை
அழுத்தம் திருத்தமாய்
பதிய வைக்க மறந்த
சமூகமாய் நாம்
வெற்றி வெற்றி
என இருவரும் வெற்றியாளராய்
வாழத்தான் திருமண வாழ்க்கை
ஒத்து வரவில்லையானால்
ஒதுங்கிக்கொள்ளலாம்
பெற்றோருடிமோ மற்றோரிடமோ
சொல்லி பிரிந்து வாழலாம்
தற்கொலை முடிவல்ல
இது மாதிரியான நிகழ்வுகள்
சமூகத்திற்கு நல்லதல்ல