புரியவில்லையா - உன்னை நேசிக்கிறேன்

காற்றோடு ஒப்பந்தம் போடுகிறேன்
உன் மேனியை மட்டும் நான் தீண்டிட
பூக்களோடு போட்டி போடுகிறேன்
உன் கூந்தலில் ஓர் நாளாவது இடம் பிடிக்க
ஆறாம் விரலாய் என்னையும் சேர்ப்பாயா?
கன்னங்களை முத்தமிடும் முடிகளை தள்ளிவிட
எப்படி நான் யாசிக்க வேண்டும்
உன் காதோர கம்பலிடம் நடனம் பயில
கைபேசியோடு கைகலப்பில் இறங்குகிறேன்
உன் கைகள் என் விரல்களை மட்டும் கோர்க்க
நான் வாழ்வது தேவதை லோகத்திலா?
உனை பார்த்ததும் நான் வினவினேன்.
இப்படி ஓர் பொய் சொல்லிவிட்டேன்
இன்னும் புரியவில்லையா? உன்னை நேசிக்கிறேன்!!

-செஞ்சிக்கோட்டை மா.மணி

எழுதியவர் : செஞ்சிக்கோட்டை மா.மணி (7-Jul-12, 1:17 am)
பார்வை : 340

மேலே