கருப்பு நிலாக்கள்!

உன் புருவம் விரிய
நீ காட்டும் ஆச்சர்யங்களில்
மறக்கிறேன் என்னை!

வெள்ளை இருட்டில்
கருப்பு நிலாக்கள்!
உன் கண்கள்!

உன் கண்ணம் குவித்தே
நகைக்கும் தருணம்
வியக்கிறேன்!

பிரிகின்ற இதழில்
மாதுளை மொட்டு
விரியக்கண்டு!

கோவம் கொண்டு
காது மடல் சிவக்கக்கண்டு
தவிக்கிறேன்!

பழுத்த மிளகாய்
என்றெண்ணி
கிளிகள் கொத்தும்
என்று!

சேர்க்கிறேன் உன்
இதழ் உதிர்க்கும்
சொல் முத்துக்களை
சிப்பிப் போல!

மூன்றாம் பிறைகள்
தெறிக்கின்றன
நீ கடித்துத் துப்பிய
நகங்களில்!

எத்திநிற்கும் ஓரப்பல்லில்
கட்டி இழுக்கும்
காந்தம் உள்ளதோ?

உன்னைச் சிரிக்கவைக்க
நான்
கோமாளி ஆகிறேன்!
இப்போதும் எப்போதும்!

எழுதியவர் : சரவணா (7-Jul-12, 1:22 am)
பார்வை : 298

மேலே