!!! ====(((அடிப்படை குற்றம்)))==== !!!

உண்ண உணவின்றி
அறைவயிரும் கால்வயிருமாய்
இன்னும் இங்கே
அலைகிறது மக்கள்...

இருக்க இடமின்றி
வீதியையே வீடாக்கி
வெம்பி அழுகிறது
நம் உறவுகள்...

உடுக்க உடையின்றி
அரை நிர்வாணமாய்
அவதிப்பட்டு கிடக்கிறது
நம் சொந்தங்கள்...

அவசர சிகிச்சைக்கு கூட
முதலில் பணத்தை கேட்கும்
மருத்துவமும்

சிலர் ஏகபோகமாக வாழ்வதும்
சிலர் செத்து செத்து வாழ்வதும்

சாதிய சாக்கடையில்
சமத்துவம் செத்து போனதும்

மதவெறியாட்டத்தால் மனிதம்
மரித்து போனதும்

பள்ளிக்கு செல்ல வேண்டிய
எதிர்காலம்
சாலையில் பிச்சை எடுப்பதும்

உழைப்பு சுரண்டல்கள் - இங்கே
அரக்கனாய் அவதாரம் எடுப்பதும்

கண்ணகி பிறந்த மண்ணில்
விபச்சாரம்
ஒரு தொழிலாகி போனதும்

மதுவிலக்கு புரட்சி நாட்டில்
அரசாங்கம்
மதுவை விற்பதும்

முதியோர் இல்லங்களும்
அநாதை இல்லங்களும்
நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும்

வெள்ளை வேஷ்டிகாரர்களால்
கந்தல் கோவணங்கள்
களவாடப்படுவதும்...

''குற்றம் மிக குற்றம்''

குற்றத்திற்கு தண்டனை என்றும்
அடிப்படை குற்றத்திற்கு
கடுமையான தண்டனை என்றும்
சட்டப்புத்தகத்தில்
தெளிவாக இருக்கிறது...

அப்படியானால்
உடனே தந்தாகவேண்டும்
கடுமையான தண்டனை
இந்த அரசுக்கு....

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (7-Jul-12, 12:09 pm)
பார்வை : 215

மேலே