அன்னையர் தினம் !
வரிகள் வரவில்லை
வார்த்தைகள் வரவில்லை
உருவகிக்கத் தெரியவில்லை
உவமைகள் பொருந்தவில்லை
வாழ்த்து சொல்ல தகுதி இல்லை
"அம்மா”
உன் பால் தந்து
உயிர் கொடுத்தாய்...
உன் வியர்வையால் - என்
வாழ்வுக்கு உரமிட்டாய்...
என் கவலைகள் துடைக்க - உன்
கண்ணீர் துடைத்தாய்...
"அம்மா”
உன் தோளுக்கு மேல் நான்
வளர்ந்துவிட்டாலும்
என்றும் உன் கால் தூசு கூட
என்னை விட உயர்ந்தது தான்...
"அம்மா”