ஜனனம் தான் என்றென்றும்

பனி நீர் பட்டதும்
மொட்டுக்கள் விரிகின்றன
ஜனனத்தின் வாயிலில் !

வாழ்வைத் தொடங்கும் முன்
மலர்கள் உதிர்த்தவைதான் உரமாக
விதைகளுக்கு விருட்சமாம் !

நிகழ்வுகள் தேடும் போது
நிம்மதி பிறக்கும்
உணர்ந்த பொழுதுகளில்!

மனம் மாறாதபோது
தினமும் ஜனனம் தான் நமக்கு
என்றென்றும் !

எழுதியவர் : செயா ரெத்தினம் (8-Jul-12, 3:58 pm)
பார்வை : 389

மேலே