கனவில் ஓர் நாள்
கனவில் ஓர் நாள்
என் பாரதமாதா வந்தாள்
பரிதவித்தே அவளும்
கண்கள் கலங்கி நின்றாள்
அம்மா என்றேன்
அவளும் அழுது புலம்பி நின்றாள்
ஏனம்மா அழுகிறாய் என்றேன்
என் எதிர்காலக் கனவெல்லாம்
பாழாய்ப் போனதென்றாள்
என்னம்மா உன் எதிர்காலக் கனவென்றேன்
என் மடியில் முகம் புதைத்து
என் ஏழைக் குழந்தைகளைப் பார் என்றாள்
விடியாது வேதனை தீராது விம்முவதைப்
பார் மகனே பார் என்றாள்
வெறும் 20 ரூபாயை வைத்தே
70 கோடிப் பேர் அன்றாட வாழ்வைக் கழிப்பதைப் பார் மகனே பார் என்றாள்
யாரம்மா காரணம் என்றேன்
மக்கள் மன்றத்தைக் கைகாட்டி நின்றாள்
புரிந்து கொண்டாயா என்றாள்
புரிந்து கொண்டேன் என்றேன்
மக்களுக்குப் புரிய வைப்பாயா என்றாள்
நிச்சயமாக என்றேன்
கண் விழித்துப் பார்த்தேன்
கனவென்று உணர்ந்தேன்
கண்ணாடியைப் பார்த்தேன்
என் கண்கள் ரத்தமாய் சிவந்திருந்தன
i