பரதேசி கையில் பாத்திரம் போல

பரதேசி கையில்
பாத்திரம் போல
கோயில்களில்
உள்ளேயும் வெளியேயும்
உண்டியல் எதற்கு?

யார் உண்டியை
நிறைப்பதற்க்கு? என்று
மனிதத்தை தின்னும் மதங்கள்

என்னும் கவிதையில் பரிதி.முத்துராசன் ஐயா அவர்கள்
கேட்டுள்ளார்கள்..


ஐயா,
தாங்கள் கூறுவது சர்ச்சுக்கும் மசூதிக்கும் பொருந்துமா.....?
பொருந்தும் என்றுதான் நான் நினைக்கிறேன்..
ஏனென்றால் நீங்கள் தன்னம்பிக்கையோடு கூறியிருக்கின்றீர்கள்...
பொருந்தாமல் இருக்குமா ...என்ன?

ஆனால் கோவில்பணம் முறையாக அரசாங்கத்திடம் போய்ச்சேருகிறது.. மற்ற வழிபாட்டுத்தலங்களில் உள்ள பணம் எங்கே ஐயா செல்கிறது....? அதையும் சற்று விளக்கமாக கூறுமாறு பணிவோடு கேட்டுக்கொள்கிறேன்...

உலகில் அனைவரும் உங்களைப்போல் தன்னம்பிக்கையாளனாக இருந்து விட்டால் டாஸ்மாக் எதற்காக. ஐயா...?
சாதிச்சன்ன்டைகள் எதற்காக ஐயா ?



கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது வேறு விஷயம்...



ஆனால் அந்தக்கொள்கை உடயவர்களுடைய தன்னம்பிக்கை

தன்னுடைய வீட்டில் மனைவி குழந்தைகளிடத்தில் பலிக்கவில்லை என்று தாங்கள் மட்டுமல்ல. தமிழ்நாடே அறிந்ததுதான் ஐயா...



ஆனால் உங்களுடைய தன்னம்பிக்கையை நான் தலை வணங்குகிறேன் ..

தங்களைப்போல் நானும்..என்பதால்..
அனைவரும் தன்னம்பிக்கையோடு இருந்தால்

கோவில் மட்டுமல்ல.... எந்த ஒரு மதமும் எந்த ஒரு மதசின்னமும் , எந்த ஒரு மதகுருமார்களும் தேவை இல்லையே....



பயந்தவனுக்கு மட்டுமே சாத்தான் உண்டு ஐயா...

உங்களைப்போல் துணிந்தவனுக்கு இல்லை...



ஒரு விஷயம் ஐயா ...

இன்று கோவில்களின் எண்ணிக்கையை விட பலமடங்கு அதிகமாகப் பெருகுவது எது என்பது தாங்கள் அறிந்ததே...

எழுதியவர் : பசுவைஉமா (16-Jul-12, 3:31 pm)
சேர்த்தது : pasuvaiuma
பார்வை : 242

மேலே