என் அறிவுக்கு...?
இந்த மண்ணில்
பிறந்தவன்தான்
நான்.
இந்த மொழியில் நான்
எழுதுவதை...
கவிதை..
என்று கூட
நீங்கள் சொல்கிறீர்கள்.
என் அறிவு...கனவு
எல்லாமே
நமது அரசின் உதவியில்...
இங்கே கிடைத்ததுதான்.
இருந்தாலும்...
என் அறிவுக்கு...
அயல் நாடுகளில்..
அந்த நாட்டின்
குடியுரிமை தந்து
கொண்டாடப் படுவேன்...
என்கிறான்...
அயல்நாட்டில்
குடியுரிமையோடு வசிக்கும்
என் நண்பன்.
என் மனைவிக்கும்...
இந்த தேசத்தை விட...
"இங்கிலாந்தோ...
இல்லாத லேண்டோ"தான்
பிடித்திருக்கிறது.
அவளுடன் வாழ...
அவளுடைய ஆசைகளோடும்
சேர்ந்து வாழ
வேண்டி இருக்கிறது.
இப்போதுதான்..
"விசா"விற்கு
விண்ணப்பித்திருக்கிறேன்.
இந்தக் கொடிநாளில்...
"ஜன கன மண"வும்...
"தாயின் மணிக்கொடி பாரீர்"-
சொல்லும் போதும்..
எனக்கு...
ஏனோ திக்குகிறது.
நான்..
"தேசத் துரோகி"
ஆகிக் கொண்டிருக்கிறேனா?
நண்பர்களே!