விலை மகள்
அங்கம் அங்கமாய்
அனுபவிகிறார்கள்,
எங்கள் அங்கங்கள்
எங்களுக்கல்ல,
இதயம் தவிர
இருப்பதையெல்லாம் நுகர்கிறார்கள்
பணம் கொடுப்பார்கள் -உடல்
பசி தீர்த்துக்கொள்ள
பாவிகள் நாங்கள்
பாரம் சுமக்கின்றோம்
வயது வந்த தங்கையாவது
வாழட்டும் என...