மழை
பூமியின்
ஷவர் பாத் ,
பூமிக்கு
தேவர்கள்
செய்யும்
அபிஷேகம் ,
பூமியில்
இன்னும் நல்லவர்கள்
இருப்பதற்கான
அடையாளம் ,
கோடை நரகாசுரனை
அழிக்க வந்த - கண்ணன் ,
வாடிய உயிர்களை
வாழ்விக்க வந்த கர்ணன் ,
அம்மாவின்
அன்பு முத்தம் ,
கடவுளின்
கருணை - இந்த மழை .