சுமையான சுகமே........
ஒரு நாள் காதலைச் சொல்லாத என்னவளை இரண்டு வருடங்களுக்குப் பிறகு பார்த்து வருவதாக புறப்பட்டேன்.ஒன்று நான் அவளைப் பார்த்து அவளிடம் என் காதலை ஏற்கச் செய்வது இல்லையேல் அவள் மடியிலே உயிர் துறப்பது என்பது எனது முடிவாக இருந்தது.ஆனால் அங்கு நடந்ததோ வேறு??????????
நிரந்தரமாக என்னை விட்டு பிரிந்த அவளோடு நான் வாழ்கிறேன்.
அவளது இறப்பிற்கான காரணம் தெரியாது இதுகாலும் தொழுகிறேன்...
அதற்கான உதிப்பு இது.
சத்தம் இல்லாத மௌனமான அந்த இரவு
என் இதயத்தின் உன் வருகைகான வருடல்கள்
உனக்கான காத்திருப்பில் என்னவள் வீட்டிலிருந்து ஓலம்.
நான் அவள் அருகில்.
என்னருகில் சந்தேகக் கை விலங்கு.
சோகங்கள் எல்லாம் என் சொந்தங்களாயின
மௌனம் களைந்து மரண அறிவித்தலாக மாற
காதலை எப்படி சொல்ல மறுத்தாயோ
அப்படியே
உன்
மரணமும் மௌனமாக களைந்து செல்ல வாயடைத்த ஊமையாய்
உன் மரணத்திற்கு காரணம் நானாக
காரணமே தெரியாத நான் கம்பி எண்ணுகிறேன்.....??????????????????
........நீ தந்த காதல் சுமையான சுகமே.........