இடைவெளி

உன்னைக் கானாத பொழுதுகள்..
என் கண்ணீர் திவலை யாகின்றதே!
உன் நேசம் கிடைக்காத நிமிடங்கள்
விம்மி புடைக்கின்றது!
மெல்லிய தென்றலோ தேகம் சூழ்ந்து
உன் கூந்தலின் வருடலை சொல்கிறதே!
உனக்கும் எனக்குமான இடைவெளி
காதலை இறுக்கிக் கொள்கிறதே!
வாசம் வீசும் பூக்கள் கூட உன்
வருகையிழந்து வாடிக் கிடக்கிறதே!
நீயில்லா தனிமைப் பொழுதுகள்
நீரற்ற நதியாகிறதே!
இல்லையடி என் உயிரே! நீ வரும் வரையே!
உயிர் மீட்டுத்தரும் நாள் எதுவரையே!

எழுதியவர் : (1-Aug-12, 4:38 pm)
பார்வை : 166

மேலே