எப்படியும் எழுதிவிட வேண்டும்!
எப்படியும் எழுதிவிட
வேண்டும்!
எப்படி எழுதுவது?
வேலியை தாண்டும் கேள்விகள்!
எல்லாம் ரெடி..
இன்னும் ரெடியாகதது
எதை எழுதுவது
என்ற சிந்தனைதான்!
ஆனாலும் எழுதவேண்டும்!..?
ஓட்ட பந்தயத்திற்கு
மைதானத்தைவிட
மனவலிமைதான் வேண்டும்!
எழுதவதற்கு..
சொற்களைவிட ...
பார்வைதான் வேண்டும்!
பார்வை இல்லாதவன்..
பயணம்
உளி இல்லாமல்
சிலை வடிக்கும் சிற்பியைப் போல்,
ஆனாலும் எழுதவேண்டும்!..?
ஆசைகளின் அரங்கேற்றம்..
நம்பிக்கை விதைக்கும் நாற்றாங்காலாய்
எங்கோ சிந்தும்
ஒரு பொறிக்காய்...
இரவுகள்..
பகல்கள்..
உறவுகள்..
மனிதர்கள்...
பறவைகள்...
எங்கும் கேட்கிறேன்..
கேட்க தெரிந்த எனக்கு..
பார்க்கத் தெரியும்போது..
கவிதை வரும்!