இனிமையாக இருக்கட்டும்

பனி துளி மெல்ல விலக
பகலவனே பக்கம் வா
இனிக்கும் காலையின்
இன்பத்தினை அள்ளித்தா !

தென்றலாய் சுகம் வீச
செடி கொடிகள் ஆடட்டும் -அங்கு
தேன்மதுர குரல் எழுப்பி
கருங் குயில்கள் பாடட்டும் !

இன்பமாய் ஒரு பொழுது
இப்போது விடிந்தது
இதுபோல நாளெல்லாம்
இனிமையாக இருக்கட்டும்

எழுதியவர் : (2-Aug-12, 7:58 am)
சேர்த்தது : m arun
பார்வை : 176

மேலே