துக்கடாக்கள்....
எத்தனை முறை
வலிக்காமல்
பற்றி எறிந்தாலும்....
தீரா ஆவேசத்துடன்
என்னையே நோக்கி வரும்
இந்த எறும்பைக்
கொன்றுவிட்டேன்
இந்தக் கணத்தில்.
பெரும் மோகத்துடன்...
என்னிடமே திரும்ப
இந்த எறும்புக்கு என் மேல்
என்ன காதல்?....
என்றே தெரிய வில்லை.
கண்ணில்லையா?-என்றும்
தெரியவில்லை.
உண்மையில்-
காதலுக்குக் கண்ணில்லைதானே!
***********************************************
இப்படித்தான்....
உன்னைப் பற்றிய கவிதை
ஒன்றை சொல்லச் சொல்கிறாய்.
பேச்சுவாக்கில்....
நீ சொன்ன உனது நண்பனின்
அலைபேசி எண் என்னை
அலைக்கழிக்க..
என்னைக் கோபித்தபடி
எழுந்துவிடுகிறாய் நீ.
இப்படித்தான்...
உன்னுடைய பேச்சில்
என்னைத் தவிர
யார் இருந்தாலும்....
என்னோடு வார்த்தைகளே
கோபித்துக் கொண்டுவிட...
நீ கேட்கும் கவிதைக்கு
எங்கு செல்வேன் நான்?