இளந்தளிர் vs இன்டர்நெட்
எனதருமை இளந்தளிரே!
தரணி எங்கும் கணினி
ஆட்சி செய்யும் காலம் இதிலே
நீ பிறந்ததென் இலாபமென்ன ?
நன்மைதான்!
ஆனால்
ஒவ்வொரு இணையதளத்திலும்
நீ நுழையும் பொழுது
வேடனின் வலையும் ஒன்று அங்கிருக்கும்!
ஆகவே,விழித்திரு என் இளந்தளிரே !
இல்லையேல்
வீறு கொண்டு நடந்த உன்னை
வீழ்த்திடுவான் தன் குகைதனிலே!