கிணற்று நிலவு!

என் இதயம் போடும் மெட்டுக்கு
கவி புணைய மறுக்கிறது
என் மனது....
இதுதான் நான்
என் மனம் முழுவதும் நீ...!என்று
எளிதில் தொடுத்துவிட்டாய்
உன் தொகையராவை...!
என் தலையில்
அழகாய் சுமற்றிவிட்டாய்
பல்லவியை சொல்ல சொல்லி....!
உனக்காக நான் வேய்ந்த
இரு வரிகளில்
என்னை ஈன்றவர்களும்
வந்தால்தான் நிரம்பபெருகின்றது...! வரிகள்கூட
பிறகென்ன பல்லவி என்னோடு....!
இரவுமுழுதும் நிலவில்
உன்முகம்
பார்த்திருப்பேன்...!
இரவில் நிலவாய்
நீ என்னோடு
அரிதல்ல...!
இரவிலும் பகலிலும்
வானவில்லே என்னோடு
அரிதல்லவா...!!
வானவில்லுக்காக
நிலவாய் எண்ணி
உன்னை ஒதிக்கினாலும்,
அவ்வப்போது
காற்றில் கலையும்
கிணற்று நிலவுதான்
நானும்....!!

எழுதியவர் : இரா.வித்யாதரன் (7-Aug-12, 9:17 am)
பார்வை : 141

மேலே