வாழ்க்கை - என் பார்வையில்
திறந்திடும் விழியுடன் துவங்கிடும் வாழ்க்கை
மூடிய இமையுடன் முடிவது இயற்கை !
கருவாய் உருவாய் வளர்ந்திடும் கருவறையில்
எருவாய் எளிதாய் கரைந்திடும் கல்லறையில் !
உய்த்திடும் உயிர்கள் மரித்திடும் ஒருநாள்
உறங்கிடும் உடல்கள் மறைந்திடும் மறுநாள் !
அவரவர் வாழ்வின் அன்றாட நிகழ்வு
உறங்காமல் காணும் உண்மைக் கனவு !
எண்ணங்கள் என்றும் நெஞ்சின் நிழற்படம்
வண்ணங்கள் நிறைந்த வாழ்வே வரைபடம் !
மின்னலாய் முடிந்திடும் இளமைக் காலம்
இன்னலாய் இருந்திடும் முதுமைக் காலம் !
அசைவின்றி ஆழ்ந்திடும் நிலைத்த நித்திரை
இசைவின்றி நிகழ்ந்திடும் நம்இறுதி யாத்திரை !
ஊரும் உறவும் உயிராய் உள்ளவரை
பேரும் புகழும் உலகம் உள்ளவரை !
சாரமில்லா வாழ்வில் சலனமுள்ள மனங்கள்
சத்தியமில்லா உலகில் நிச்சயமில்லா வாழ்க்கை !
இதயம் நிற்கும்வரை இவ்வுலகில் வாழும்வரை
உள்ளத்தால் ஒன்றிடுவோம் !
இன்பம் பெற்றிடுவோம் !
என்றும் உங்கள் ,