எரிமலை இங்கே மையம் கொள்ளட்டும்

உழைப்பவன சுரண்டுரவ
உடம்ப வளர்த்து திரியுறா
உழைப்பவனோ நாளும் நாளும்
ஓடாய் தேயுறா

வளர்த்து விட்ட நாடுன்னு
வசனம் மட்டும் பேசுறா
வாய்க்கரிசிக்கு வழியின்றி
மனிதன் இங்கே வாழுறா

முப்போகம் விளைந்த காவிரி
முந்தானைய ஏந்துது
முண்டி முண்டி பார்த்து விட்டு
முக்குலதான் உறங்குது

டெல்லியிலிருந்து வருகின்ற தேருல
சுகமாக ஏறுறா
நாற்பது ஆண்டு கால பிரச்சனைய
கிடப்புலதா போடுறா

எழுத படிக்க தெரியாம
எந்திரமா உழைக்கிறா

எழுத படிக்க தெரிந்தவனோ
ஏய்ச்சுப் பிழைக்கிறா
பணம் மட்டும் வாழ்க்கையின்னு
பாவிப்பய நினைக்குறா


நீதி நெறி விளக்கமெல்லா
கடைச் சரக்கா போயிட்டு

நித்தம் நித்தம் சாகிற மனிதன
காப்பாத்த வழியிருந்தா சொல்லுங்க

நம்ம நாட்டுல
இல்லாத எரிமலைய ........
மையம் கொள்ளச் செய்யுங்க
எரிகின்ற குழம்புலதா அநீதிய அழிக்கலா!

எழுதியவர் : porchezhian (11-Aug-12, 1:51 pm)
சேர்த்தது : porchezhian
பார்வை : 216

மேலே