எனக்குள்ளே இறைவன் கண்டேன்

ஓசைக்குள் ஸ்வரம் கண்டேன் - ஒலி
இசைஎனவே இனிக்கக் கண்டேன் - என்
உள்ளத்தின் குணம் கண்டேன் - எனவே
எண்ணத்தில் இனிமை கண்டேன்.....!

கத்துவதில் கோபம் கண்டேன் - நல்ல
கருத்துக்களில் வேதம் கண்டேன்
இன்சொல்லே ரசிக்க கண்டேன் - அதில்
இறைமகிழ்ந்து வசிக்கக் கண்டேன்.....!

அன்பினையே எதிலும் கண்டேன் - என்
அகத்தினிலே ஒளியை கண்டேன்
அகம்பாவம் அழியக் கண்டேன் - என்
ஆரோக்கியம் செழிக்கக் கண்டேன்.....!

எதிரியையும் நட்பாய் கண்டேன் - உயிர்கள்
எல்லாமும் உறவாய் கண்டேன்
எதிர்காலம் சிறக்கக் கண்டேன் - காரணம்
நிகழ்கால ஒழுக்கம் கண்டேன்.........!

இறந்தகாலம் நானாக கண்டேன் - எனினும்
வசந்தகாலமாய் வாழக் கண்டேன்
வருங்கால வம்சம் கண்டேன் - எனைப்போல்
வளமுடனே அவர் வாழக் கண்டேன்.....!

எனக்குள்ளே இறைவன் கண்டேன் - நான்
என்றெனாத இதயம் கண்டேன்
எங்குமே இன்பம் கண்டேன் - ஏனெனில்
எனக்குள்ளே தெளிவு கண்டேன்......!

எழுதியவர் : (18-Aug-12, 1:54 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 142

மேலே