முன்னேற்பாடு...

நான் கொடுத்த
காதல் கடிதங்களைக்
கிழித்துப்போட்டுவிடுவாய்
உன் வீட்டுக்
குப்பைக் கூடையில்...

தெரிந்தே - நான்
காத்திருக்கிறேன்- உன்
தெருமுனைக்
குப்பைத்தொட்டியின் முன்...

நகராட்சிக்
குப்பைத்தொட்டிக்குப்
போகும் முன் -
கிழிந்துகிடக்கும் - என்
இதயத் துண்டுகளைப்
பொறுக்கிக்கொள்ளவேண்டும்...

எழுதியவர் : நெல்லை மணி (20-Aug-12, 1:47 am)
சேர்த்தது : நெல்லை மணி
பார்வை : 92

மேலே