.நிஜங்களை தேடி
பகட்டுகளை கண்டு
பண்புதனை இழந்துவிட்டு
பவித்திரமான அன்புதனை
தேடிக்கொண்டிருக்கிறேன்
கழுகு கண்கொண்டு
காத்திருந்த சமுதாயம்
ஏளனமாய் சிரித்தது
சாதனைகளை மறந்துவிட்டு
சோதனைகளை மட்டும் தந்தது
பாவமிந்த சமூகம்.
நானுமோர் மனிதனென்பதை
மறந்து விட்டது போலும் - ஆனாலும்
அடங்கியதா இந்த சமூகம்
இன்னொருவனை தேடுகின்றது
போற்றுவதற்கல்ல
தூற்றுவதற்கு
போலிகளின் மத்தியிலிருந்து கொண்டு
நிஜங்களை தேடுகின்றேன்
ஏளனித்த சமூகம் ஒருமுறையேனும்
ஏறெடுத்துப் பார்ப்பதற்காய்...