மங்கையின் மனம்
உன்னை காணும் முன் வரை நான் நினைத்ததில்லை
உலகமும் சுழன்று கொண்டுதான் இருக்கிறதென்று
உன் கண்களால் என்னை காண விரும்பினேன்
கண்டபோது நாணத்தால் தலை குனிந்தேன்
பார்க்கும் போதெல்லாம் கட்டி தழுவவேண்டும் என கைகள் துடித்தது
ஒரு பெண்ணிற்கே உள்ள வெட்கம்
என்னை தடுத்தது
காலம் வரும் நான் உனதாக
கல்லறைவரை நீ இருப்பாய் என் உயிராக.