வ.உ.சி. 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5
கடல்தாண்டி வந்திங்கு
கடைவிரித்த வெள்ளையனை-தன்
உடலோடு உயிர் தங்கி
இருந்த நிமிடம் வரை
திடமாக எதிர்த்து
திருப்பி அனுப்புவதற்கு
அடலோடு சமர்புரிந்த
அயராத வீரனவன்...!
மக்களினம் பாரதத்தில்
மகிழ்வோடு வாழ்வதற்கு
செக்கிழுத்து கல்லுடைத்து
சீரழிவு பல தாங்கி
எக்கணமும் பாடு பட்ட
எங்கள் அன்பு வ.உ.சி.யே
இக்கவிதை மலர் கொண்டு
வணங்குகிறேன்...நீர் வாழியவே
(மறுபதிவு)
வ.உ.சி. 1872-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் நாள் தமிழ் நாட்டில் திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஒட்டப்பிடாரம் என்ற ஊரில் உலகநாத பிள்ளை, பரமாயி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.
இன்று அவரை நினைவு கூறுவதில் பெருமையடைவோம்...
நன்றி...
பசுவைஉமா...