ரகசிய தோழி

என் உள்ளத்தில் எழுந்த உன்னத உணர்வுகளையும்
என் உதடுகளால் சொல்லத்துடித்த இனிய நினைவுகளையும்
என்னுள் ஏற்ப்பட்ட மாற்றங்களின் நிகழ்வுகளையும்
என்னை கண்ணீர் விட்டு கதறச்செய்த கஷ்டங்களையும்
என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாத நிஜங்களையும்
என்னுடைய உணர்சிகளை தூண்டிய எண்ணங்களையும்
என்னுள்ளே உதயமான கோடான கோடி கேள்விகளையும்
என் மனதுள் போட்டு நிரப்பி குவித்து வைத்தேன்
என்னுள் குவிந்த குவியல்களாய் அவை நிரம்பி ததும்பவே என்னவற்றை மற்றவரிடம் பகிர நினைத்தேன்
என் உணர்வுகளை அவர்கள் மனம் குப்பை என நினைத்து
என்னவர்களின் உதடுகள் உதிர்த்து விட்டால் காற்றில்
என் உணர்வுகள் உதிர்த்த சருகாய் போகுமேயென எண்ணி
என் எல்லாவற்றையும் உன்னிடம் பகிர்ந்தேன்
என் ரகசிய தோழி நாட்குறிப்பே ...
...கவியாழினி...