சுடுகாட்டுத் துளிகள் - கே.எஸ்.கலை

மரணத்திற்காக
மரணித்த பூக்கள்
மலர்வளையம்...!

பிணங்களை வரவேற்க
சிரிக்கிறது ரோஜாப் பூக்கள்
சுடுகாட்டு வேலியில் !

ரொம்ப நாளைக்கு பிறகு
ஒரு மரணச் செய்தி
வெட்டியான் சிரித்தான் !

பிணம் எரிந்தது
வெட்டியான் வீட்டில்
அடுப்பு எரிந்தது !

ஒப்பாரிக்கு
இசையமைத்தது
தப்பு !?
_______

எழுதியவர் : கே.எஸ்.கலை (10-Sep-12, 7:54 am)
பார்வை : 239

மேலே