தஞ்சாவூர் பொம்மை !

நான் தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை,
நன்றாய் தலையாட்டுவேன், உண்மை.
கம்பங்கூழ் உண்ணும் நீங்கள் பொங்கல்,
என்று சொன்னால் தலையாட்டுவேன்,
கோபுரத்தில் வாழும் நீங்கள் குடிசை வாழ்கை,
என்றாலும் தலையாட்டுவேன்.
வாழ்நாள் அரை வயிற்று கஞ்சிகாரர்கள்,
விருந்துணவு என்றுறைத்தாலும்,
வாய்வீச்சு வீரர்கள் இமயம் பிளந்தோம்,
என்று பிதற்றினாலும், கதறினாலும்,
எம் இளம் பெண்கள் கையூட்டு கொடுத்து,
குடும்பம் என்ற கோவிலை கட்டினாலும்,
குடும்பக்கோவில் குடி போதையில்,
சிதைந்து சின்னாபின்னமானாலும்,
முச்சந்தியில் நின்று தலையாட்டுவோம்,
நாங்கள் , தலையாட்டுவோம், இடவலமாக,
வல இடமாக, மேலும் கீழுமாக, கீழும் மேலுமாக,
இல்லை என்றோ ஆமாம் என்றோ,
சொல்ல தெரியாத வீரர்களாக,
தலையாட்டுவோம் !
வாருங்கள் ! தலையாட்டுவோம் !

எழுதியவர் : (10-Sep-12, 7:49 am)
பார்வை : 493

மேலே