ஏழை - பணக்காரன்

பட்டுக்கம்பளம் விரித்து
பசியில்லாதவனுக்கு பால்சோறு
பகலெல்லாம் உழைத்து பசியால்
துடிப்பவனுக்கு பாலுமில்லை சோறுமில்லை

பணத்தால் பட்டம் வாங்கியவன்
பகட்டு வாழ்வில்
பாங்குடன் அறிவை பெற்றவன்
பணமில்லாமல் படிவம் வாங்க வரிசையில்

கள்ளமில்லா மனம்படைத்தவன்
வசிக்க ஒரு கல் வீடில்லை
கபட மனம் கொண்டவன் கருப்புபணத்தால் சலவைக்கல் வீட்டில் சந்தோசமாய்

அநியாயமாக வாங்கிய பணத்தில்
ஆடம்பரமாய் வசதி
அத்துனைநாளும் ஓயாமல்
உழைத்தவனுக்கு அடிப்படை வசதியில்லை

ஊரார் பணத்தில் ஊருராய்
பயணம் விமானத்தில்
ஊன்வருத்தி பணிசெய்தவன்
நின்று பார்க்கிறான் அதை வேடிக்கை

எத்துனையோ செலவில் அலங்கார
உடைகள் அரைகுறையாய்
ஏதுமில்லாமல் தவிக்கிறான்
அரைகுறை மறைக்க ஆடையில்லாமல்

பணக்காரன் மேலும் பணக்காரனாக
உயர்கிறான்
பாவம் ஏழை இன்னும் ஏழையாகவே வருந்துகிறான்

பெண்ணில் தொடங்கி மண்ணில்
முடியும் வாழ்வு என
தெரிந்தும் பெண்ணுக்கும் மண்ணுக்கும்
மனம் துடிப்பதேன்

நம் நாட்டில் மாறாமல் தொடரும் இந்த நிலை ஏனோ ?

எழுதியவர் : சரண்யா.வீ (10-Sep-12, 11:59 am)
பார்வை : 1265

மேலே