தண்டச்சோறு....
பட்டத்திற்குப் பின்
இன்னொரு பட்டம்
தண்டச்சோறு....
அதைப் பெற்றோர் சொல்லும்போது
இதயம் ஆகுதே
சுக்குநூறு... !!
வேலைத்தேடி அலைகையில்
எம்மனம் புரண்டோடும்
காட்டாறு...
வாய்ப்பொன்று கிடைத்தால்
கண்டிப்பாய் வாங்குவேன்
பல நல்ல பேறு...